< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
ரேஷன் கடைகளுக்கு இன்று விடுமுறை
|15 Jun 2024 1:46 AM IST
ரேஷன் கடைகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர் ஹர்சஹாய் மீனா, மாவட்ட கலெக்டர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் விடுமுறை தினங்களான 23.7.2023 மற்றும் 4.8.2023 ஆகிய 2 நாட்கள் ரேஷன் கடை பணியாளர்கள் பணிபுரிந்தனர். இந்தநிலையில், அதற்கு ஈடாக அனைத்து ரேஷன் கடை பணியாளர்களும் 15.6.2024 (இன்று) சனிக்கிழமை மற்றும் 20.7.2024 (சனிக்கிழமை) ஆகிய 2 தினங்கள் விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.