< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
தமிழகத்தின் 4 மாவட்டங்களில் இன்று சதமடித்த வெயில்
|27 July 2023 7:39 PM IST
இன்று தமிழகத்தில் நான்கு மாவட்டங்களில் வெப்பம் சதமடித்தது.
சென்னை,
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் லேசானதுமுதல் மிதமான மழை பெய்துவருகிறது. இதனிடையே, தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் வெப்பம் அதிகரித்து காணப்பட்டது.
அதன்படி, இன்று தமிழகத்தில் நான்கு மாவட்டங்களில் வெப்பம் சதமடித்தது. இதில் அதிகபட்சமாக தூத்துக்குடியில் 103.1 டிகிரி வெயில் பதிவானது. மதுரை - 102.92, கடலூர் - 100.76, நாகை - 100.4 டிகிரி வெப்பம் பதிவானது.