< Back
மாநில செய்திகள்
செங்கல்பட்டு மாவட்டத்தில் மழைநீர் தேங்கியுள்ள 5 பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை
மாநில செய்திகள்

செங்கல்பட்டு மாவட்டத்தில் மழைநீர் தேங்கியுள்ள 5 பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

தினத்தந்தி
|
14 Nov 2022 5:17 AM IST

மழை நீரை வெளியேற்றி தூய்மை பணிகளை மேற்கொள்வதற்காக 5 பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு,

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று அதிகாலை முதல் மதியம் வரை தொடர்ந்து கனமழை பெய்து வந்த நிலையில், அதன் பிறகு மழை சற்று குறைந்தது. இந்த நிலையில் இன்று திங்கள்கிழமை பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் நேற்று இரவு செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளின் நிலை குறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். மழை காரணமாக பள்ளிகளில் ஏதேனும் பாதிப்புகள், மழை நீர் தேங்கி நிற்பது உள்ளிட்டவை குறித்து அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார்.

இதையடுத்து செங்கல்பட்டு மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக, தண்ணீர் தேங்கியுள்ளதால், மழை நீரை வெளியேற்றி தூய்மை பணிகளை மேற்கொள்வதற்காக குறிப்பிட்ட சில பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.

அதன்படி அனகாபுதூர் அரசு மேல்நிலைப்பள்ளி, நன்மங்கலம் அரசு உயர்நிலைப்பள்ளி, மானாம்பதி அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி, நன்மங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, வடகால் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகிய 5 பள்ளிகளுக்கு இன்று(திங்கள்கிழமை) விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்