< Back
மாநில செய்திகள்
தமிழகத்தில் இன்றும் நாளையும் வழக்கத்தைவிட வெயில் அதிகரிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்றும் நாளையும் வழக்கத்தைவிட வெயில் அதிகரிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தினத்தந்தி
|
5 Aug 2023 2:03 PM IST

தமிழகத்தில் இன்றும் நாளையும் அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி முதல் 39 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,

05-08-2023 முதல் 11-08-2023 வரை:- தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

வெப்பநிலை:- தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி முதல் 39 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது வெப்ப அழுத்தம் காரணமாக அசவுகரியம் ஏற்படும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த இரு தினங்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்