< Back
மாநில செய்திகள்
தஞ்சையில் இன்றும், நாளையும் மின்நிறுத்தம்
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

தஞ்சையில் இன்றும், நாளையும் மின்நிறுத்தம்

தினத்தந்தி
|
30 Aug 2023 2:58 AM IST

தஞ்சையில் இன்றும், நாளையும் மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

தஞ்சாவூர்;

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தஞ்சை உதவி செயற்பொறியாளர் கருப்பையா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தஞ்சை மணிமண்டபம் துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் உயர் அழுத்த மின்பாதையில் பழுதான மின்கம்பங்களை மாற்றிவிட்டு புதிய மின்கம்பம் நடும் பணி நடைபெற உள்ளதால் மருத்துவக்கல்லூரி சாலை ஜே.ஜே.நகர், அண்ணாமலைநகர், பொன்நகர், புதிய வீட்டுவசதி வாரிய நெய்தல், மருதம், நேதாஜி, காவேரிநகர், நட்சத்திர நகர் போன்ற பகுதிகளில் இன்று (புதன்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது.மேலும் தஞ்சை தொகுப்பு துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் உயர்அழுத்த மின்பாதையில் பழுதான மின்கம்பங்களை அகற்றிவிட்டு, புதிய மின்கம்பம் நடும் பணி நடைபெற உள்ளதால் கிருஷ்ணபுரம், ராஜராஜன்நகர், ஜெயலட்சுமிநகர், புதுநகர், ராஜீவ்நகர், வனதுர்காநகர், ராசாமிராசுதார் ஆஸ்பத்திரி போன்ற பகுதிகளில் நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வினியோகம் இருக்காது.மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்