< Back
மாநில செய்திகள்
அரசு பள்ளி அருகே புகையிலை விற்றவர் கைது
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

அரசு பள்ளி அருகே புகையிலை விற்றவர் கைது

தினத்தந்தி
|
12 July 2022 11:59 AM GMT

மறைமலைநகர் அரசு பள்ளி அருகே புகையிலை விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அரசு பள்ளி அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக மறைமலைநகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று பார்த்தபோது பள்ளி அருகில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்து கொண்டிருந்த மறைமலைநகர் பகுதியை சேர்ந்த வெங்கடேஸ்வரன் (வயது 56), என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இது குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்