< Back
மாநில செய்திகள்
தென்காசி
மாநில செய்திகள்
புகையிலை பொருட்கள் விற்றவர் கைது
|28 Oct 2022 12:15 AM IST
கடையநல்லூர் அருகே புகையிலை பொருட்கள் விற்றவர் கைது செய்யப்பட்டார்.
கடையநல்லூர்:
கடையநல்லூர் அருகே கண்மணியாபுரத்தில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து புளியங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அசோக் உத்தரவின் பேரில், கடையநல்லூர் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி தலைமையில் போலீசார் அந்த கடைக்கு சென்று சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதும், சில்லறை கடைகளுக்கு விற்பனை செய்வதற்காக 7 மூட்டைகளில் புகையிலை பொருட்கள் வைக்கப்பட்டு இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ரூ.46 ஆயிரம் மதிப்பிலான அந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக கண்மணியாபுரம் வடக்குத்தெருவை சேர்ந்த ராஜா மகன் செல்லையா (வயது 30) என்பவரை கைது செய்தனர்.