< Back
மாநில செய்திகள்
புகையிலை விற்றவர் கைது
தென்காசி
மாநில செய்திகள்

புகையிலை விற்றவர் கைது

தினத்தந்தி
|
16 Oct 2022 12:15 AM IST

சுரண்டை அருகே புகையிலை பொருட்கள் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

சுரண்டை:

சுரண்டை அருகே வீரகேரளம்புதூர் பகுதியில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் அன்னலட்சுமி தலைமையில் போலீசார் வீரகேரளம்புதூர் நவநீதகிருஷ்ணன் கோவில் தெருவில் கண்ணன் (வயது 38) என்பவரது கடையில் சோதனை நடத்தினர். அப்போது புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து 175 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து வீரகேரளம்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்