< Back
மாநில செய்திகள்
திருநெல்வேலி
மாநில செய்திகள்
புகையிலை பொருட்கள் விற்றவர் கைது
|1 Oct 2022 1:52 AM IST
புகையிலை பொருட்கள் விற்றவர் கைது செய்யப்பட்டார்
வள்ளியூர்:
வள்ளியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெர்டர் சகாய ராபின் ஷாலு மற்றும் போலீசார் வள்ளியூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வள்ளியூர் ராதாபுரம் ரோட்டில் தளபதிசமுத்திரம் கருங்கண்ணன் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த தங்கசாமி (வயது 57) என்பவரின் டீக்கடையை சோதனை செய்தபோது அரசால் தடை செய்யப்பட்ட, மனித உயிருக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய புகையிலை பொருட்களை விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரியவந்தது. தங்கசாமி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி கைது செய்தனர். அவரிடமிருந்து 3 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.