< Back
மாநில செய்திகள்
ராணிப்பேட்டை
மாநில செய்திகள்
புகையிலை விற்றவர் கைது
|28 Aug 2022 10:02 PM IST
காவேரிப்பாக்கம் அருகே புகையிலை விற்றவர் கைது செய்யப்பட்டார்.
காவேரிப்பாக்கம் அருஅவளூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஏழுமலை மற்றும் போலீசார் காவேரிப்பாக்கம் அருகே நடுசித்தஞ்சி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள ஒரு பெட்டிக்கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்வது தெரிய வந்தது.
இதனையடுத்து போலீசார் பெட்டிக்கடையில் சோதனை செய்த போது, தடை செய்யப்பட்ட 10 பாக்கெட் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, கடை உரிமையாளர் பார்த்திபன் (வயது 51) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.கே புகையிலை விற்றவர் கைது செய்யப்பட்டார்.