< Back
மாநில செய்திகள்
புகையிலை பொருட்கள் விற்றவர் கைது
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

புகையிலை பொருட்கள் விற்றவர் கைது

தினத்தந்தி
|
15 Jun 2022 10:40 PM IST

புகையிலை பொருட்கள் விற்றவர் கைது

கருங்கல்:

கருங்கல் அருகே தாழக்கன்விளையை அடுத்த செம்முதல் பகுதியை சேர்ந்தவர் சத்தியநேசன் (வயது 58). இவர் அப்பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். அங்கு தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பெட்ரோல் போன்றவை விற்பனை செய்வதாக கருங்கல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், சப்-இன்ஸ்பெக்டர் சோபன ராஜ் தலைமையிலான போலீசார் கடையில் சோதனை போட்டனர். அப்போது அங்கு விற்பனைக்காக வைத்திருந்த புகையிலைப் பொருட்கள் மற்றும் 35 லிட்டர் பெட்ரோல் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்ததோடு, சத்திய நேசனையும் கைதுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்