< Back
மாநில செய்திகள்
புகையிலை பொருட்கள் விற்றவர் கைது
தென்காசி
மாநில செய்திகள்

புகையிலை பொருட்கள் விற்றவர் கைது

தினத்தந்தி
|
25 May 2022 9:26 PM IST

புகையிலை பொருட்கள் விற்றவர் கைது

கடையம்:

தென்காசி மாவட்டம் பொட்டல்புதூர் முப்புடாதி அம்பாள் கோவில் தெருவை சேர்ந்தவர் சாகுல்ஹமீது மகன் முகம்மது யூசுப் (வயது 47). இவர் பெங்களூருவில் மளிகை கடையில் வேலை பார்த்து வருகிறார். இவர் பெங்களூருவில் இருந்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கொண்டு வந்து விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதுபற்றி ஆழ்வார்குறிச்சி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் விசாரணை நடத்தி முகம்மது யூசுபை பிடித்து அவரிடமிருந்த ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள 25 கிலோ புகையிலை பொருளை (குட்காவை) பறிமுதல் செய்தார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தார்.


மேலும் செய்திகள்