< Back
மாநில செய்திகள்
திருப்பூர்
மாநில செய்திகள்
புகையிலைப்பொருட்கள் விற்றவர் கைது
|24 Oct 2023 5:40 PM IST
புகையிலைப்பொருட்கள் விற்றவர் கைது
போடிப்பட்டி
குடிமங்கலம் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் சரவணகுமார், ஏட்டு கோவிந்தராஜ் ஆகியோர் கோட்டமங்கலம் பஸ் நிறுத்தம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் திண்டுக்கல் மாவட்டம் கணக்கம்பட்டி பகுதியைச் சேர்ந்த காளிதாஸ் (வயது 29) என்பதும், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனைக்காக கொண்டு செல்வது தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 6 கிலோ 150 கிராம் புகையிலைப் பொருட்கள் மற்றும் மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர்.