< Back
மாநில செய்திகள்
கரூர்
மாநில செய்திகள்
புகையிலை பொருட்கள் விற்றவர் கைது
|29 Sept 2023 11:30 PM IST
புகையிலை பொருட்கள் விற்றவர் கைது செய்யப்பட்டார்.
கரூர் வெங்கமேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகமாணிக்கம் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வெங்கமேடு பகுதியில் உள்ள மளிகைக் கடையில் புகையிலை பொருட்கள் விற்றதாக அதே பகுதியை சேர்ந்த கோபால் (வயது 50) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த புகையிலை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.