< Back
மாநில செய்திகள்
தேனி
மாநில செய்திகள்
புகையிலை பொருட்கள் விற்றவர் கைது
|14 Aug 2023 12:15 AM IST
பெரியகுளம் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
பெரியகுளம் தென்கரை பகுதியில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், தென்கரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அனுசுயா மற்றும் போலீசார் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தென்கரை திருவள்ளுவர் சிலை அருகே உள்ள பெட்டிக்கடையில் புகையிலை பொருட்கள் விற்றது தெரியவந்தது. இதையடுத்து கடைக்காரரான பிரேம்குமார் (வயது 40) என்பவரை போலீசார் கைது செய்தனர்.