< Back
மாநில செய்திகள்
தென்காசி
மாநில செய்திகள்
புகையிலை பொருட்கள் விற்றவர் கைது
|5 Aug 2023 12:15 AM IST
தென்காசியில் புகையிலை பொருட்கள் விற்ற கடைக்காரர் கைது செய்யப்பட்டார்.
தென்காசி கூலக்கடை பஜார் பகுதியில் ஒரு கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் தென்காசி போலீஸ் இன்ஸ்பெக்டர் கே.எஸ்.பாலமுருகன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சுதாகர், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வெள்ளபாண்டி மற்றும் போலீசார் அந்த கடைக்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அந்த கடையில் சுமார் ரூ.41 ஆயிரம் மதிப்பிலான 50 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்து, கடை உரிமையாளர் தைக்கா தெருவை சேர்ந்த சலீம் என்பவரை கைது செய்தனர்.