< Back
மாநில செய்திகள்
நாமக்கல்
மாநில செய்திகள்
ரூ.10 ஆயிரம் புகையிலை பொருட்கள் பறிமுதல்
|9 Dec 2022 12:36 AM IST
நாமக்கல் நகராட்சியில் ரூ.10 ஆயிரம் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்தனர்.
நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் உத்தரவின் பேரில் நாமக்கல் நகராட்சி ஆணையாளர் சுதா அறிவுரையின்படி நாமக்கல் நகராட்சி பகுதிகளில் பள்ளிகளுக்கு அருகில் உள்ள கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனையை தடை செய்யும் வகையில் திருச்சி மற்றும் மோகனூர் சாலைகளில் உள்ள கடைகளில் சுகாதாரத்துறையினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
நகராட்சி சுகாதார அலுவலர் திருமூர்த்தி தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் இந்த சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின்போது சுமார் ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த கடைகாரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.