< Back
மாநில செய்திகள்
மதுரை
மாநில செய்திகள்
53 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
|26 Aug 2022 12:43 AM IST
53 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
மதுரை வரிச்சியூர் பகுதியில் குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கருப்பாயூரணி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சோதனை செய்தபோது அங்கு புகையிலை பொருட்கள் விற்பனை செய்து கொண்டிருந்த ரத்தினவேல் பாண்டியன் (வயது 40), ரஞ்சித் (23), ராஜா (42), சிவா (34) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள 53 கிலோ புகையிலை பொருட்கள், 3 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மதுரை மாவட்டத்தில் புகையிலை பொருட்கள் விற்பனையில் ஈடுபடுவோர், பதுக்குவோர் மற்றும் கடத்தலில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், கடைகளுக்கு சீல் வைக்கப்படும் எனவும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் எச்சரித்துள்ளார்.