< Back
மாநில செய்திகள்
புகையிலை பொருட்கள் விற்றவர் கைது
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

புகையிலை பொருட்கள் விற்றவர் கைது

தினத்தந்தி
|
9 July 2022 11:13 PM IST

ராயக்கோட்டையில் புகையிலை பொருட்கள் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

ராயக்கோட்டை

ராயக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் தலைமையிலான போலீசார் எச்சம்பட்டி கிராமத்தில் ரோந்து சென்றனர். அங்குள்ள ஒரு பெட்டிக்கடையில் சோதனை செய்தபோது புகையிலை பொருட்கள் விற்றது தெரியவந்தது. இதையடுத்து கடை உரிமையாளரான வினோத்குமார் (வயது35) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்