< Back
மாநில செய்திகள்
தேனி
மாநில செய்திகள்
பாலியல் வழக்கை வாபஸ் பெறக்கோரி மாணவியை மிரட்டியவர் கைது
|23 March 2023 12:15 AM IST
தேனி அருகே உள்ள தர்மாபுரியை சேர்ந்த காளிமுத்து மகன் ஈஸ்வரன் (வயது 39). இவரும், தேனி பவர் ஹவுஸ் தெருவை சேர்ந்த ஜெயச்சந்திரன் என்பவரும் நண்பர்கள். ஜெயச்சந்திரன் பள்ளி மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அந்த மாணவியின் வீட்டுக்கு சென்ற ஈஸ்வரன், தனது நண்பன் மீதான வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்று மாணவி மற்றும் அவருடைய பெற்றோருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவியின் தாயார் தேனி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார், வழக்குப்பதிவு செய்து ஈஸ்வரனை நேற்று முன்தினம் கைது செய்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.