< Back
மாநில செய்திகள்
ஈரோடு
மாநில செய்திகள்
ஓணம் பண்டிகையை வரவேற்கும் வகையில் ஈரோட்டில் கேரள சமாஜத்தினர் அத்தப்பூ கோலமிட்டனர்
|30 Aug 2022 2:26 AM IST
ஓணம் பண்டிகையை வரவேற்கும் வகையில் ஈரோட்டில் கேரள சமாஜத்தினர் அத்தப்பூ கோலமிட்டனர்.
மலையாள மக்களின் மிக முக்கியமான பண்டிகையான ஓணம் வருகிற 8-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு மலையாள மொழி பேசும் மக்கள் தங்கள் வாழும் பகுதிகளில் உற்சாக வரவேற்பு நிகழ்ச்சிகளை தொடங்கி உள்ளனர். அதன்படி ஈரோடு கேரள சமாஜம் சார்பில் எஸ்.கே.சி. ரோடு ராஜாக்காடு பகுதியில் உள்ள கேரள சமாஜம் அலுவலகத்தில் அத்தப்பூ கோலமிடும் நிகழ்ச்சி நடந்தது. ஈரோடு வாழ் கேரள (மலையாளி) பெண்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அத்தப்பூ கோலமிட்டும், பாரம்பரிய நடனம் ஆடியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்