< Back
மாநில செய்திகள்
ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்தவர்களிடம்    ரூ.24¾ லட்சம் மோசடி
திருச்சி
மாநில செய்திகள்

ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்தவர்களிடம் ரூ.24¾ லட்சம் மோசடி

தினத்தந்தி
|
5 July 2022 8:05 PM GMT

திருச்சியில் அதிக லாபம் கிடைக்கும் எனக்கூறி ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்தவர்களிடம் ரூ.24¾ லட்சம் மோசடி நடந்தது.

திருச்சியில் அதிக லாபம் கிடைக்கும் எனக்கூறி ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்தவர்களிடம் ரூ.24¾ லட்சம் மோசடி நடந்தது.

ரியல் எஸ்டேட்டில் முதலீடு

திருச்சி தென்னூர் ஜெனரல் பஜார் பகுதியை சேர்ந்தவர் முகமதுசாஜித். இவருடைய மனைவி நஸ்ரின் (வயது 38). இவர் கே.கே.நகர் சுந்தர் நகர் பகுதியில் உள்ள கே.என்.ஆர். ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்த நிறுவனத்தின் உரிமையாளர் முருகன் என்பவர் நஸ்ரினிடம் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று கூறி உள்ளார். இதையடுத்து நஸ்ரின் தனது குடும்ப உறவினர்களிடம் தெரிவித்து கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ரூ.12 லட்சம் திரட்டி அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தார். மேலும், முருகன் நடத்தி வந்த சிட்பண்ட்டில் நஸ்ரின் ரூ.75 ஆயிரம் முதலீடு செய்தார். இவரைபோல் மேலும் 45 பேர் மாதத்தவணையில் காலிமனை வாங்கும் திட்டத்தில் ரூ.12 லட்சத்து 2 ஆயிரம் வரை முதலீடு செய்துள்ளனர். ஆனால் முதலீடு செய்தவர்களுக்கு இடத்தை பதிவு செய்து கொடுக்காமல் முருகன் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இது குறித்து நஸ்ரின் நிறுவனத்துக்கு சென்று முருகனிடம் கேட்டபோது, அவரை மிரட்டி தகாத வார்த்தைகளால் பேசி பணத்தை திருப்பிக் கொடுக்க மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

வழக்கு

இது குறித்து திருச்சி குற்றவியல் கோர்ட்டு எண் 1-ல் நஸ்ரின் வழக்கு தொடர்ந்தார். கோர்ட்டு வழிகாட்டுதலின்படி, மாநகர குற்றப்பிரிவு போலீசார் ரியல்எஸ்டேட் மற்றும் மாதத்தவணை திட்டத்தில் சேர்த்து மொத்தமாக ரூ.24 லட்சத்து 77ஆயிரம் மோசடி செய்ததாக முருகன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்