< Back
மாநில செய்திகள்
ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம்  தங்க சங்கிலி பறிக்க முயற்சி
திருநெல்வேலி
மாநில செய்திகள்

ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் தங்க சங்கிலி பறிக்க முயற்சி

தினத்தந்தி
|
11 Oct 2022 12:45 AM IST

ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் தங்க சங்கிலி பறிக்க முயன்ற பெண் கைது செய்யப்பட்டார்.

நெல்லை பொட்டல் பகுதியை சேர்ந்தவர் குழல்வாய்மணி (வயது 70). இவர் நேற்று மதியம் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று விட்டு அரசு பஸ்சில் மீண்டும் வீட்டுக்கு திரும்பினார். பஸ் கோட்டூர் பகுதியில் வந்த போது பஸ்சில் இருந்து ஒரு பெண் மூதாட்டி குழல்வாய்மணி கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை பறிக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த மூதாட்டி தங்க சங்கிலியை பிடித்து கொண்டு, சத்தம் போட்டார். பஸ் உடனடியாக நிறுத்தப்பட்டதால் அந்த பெண் பஸ்சில் இருந்து இறங்கி ஓடி தப்பிக்க முயன்றார். ஆனால் பஸ்சில் இருந்த சக பயணிகள் அந்த பெண்ணை பிடித்து பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீசில் ஒப்படைத்தனர்.

போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகவடிவு விசாரணை நடத்தினார். அதில் அவர் மானாமதுரை சிப்காட் சர்வீஸ் ரோட்டை சேர்ந்த செல்வகுமார் மனைவி செல்வி (35) என்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

மேலும் செய்திகள்