< Back
மாநில செய்திகள்
பாதை ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்:  பொதுமக்கள் கோரிக்கை
தேனி
மாநில செய்திகள்

பாதை ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

தினத்தந்தி
|
18 Aug 2022 10:00 PM IST

பெரியகுளம் அருகே பாதை ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்

பெரியகுளம் அருகே ஜல்லிப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ஏ.மீனாட்சிபுரம் இந்திரா காலனியை சேர்ந்த மக்கள் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். கலெக்டர் முரளிதரனிடம் அவர்கள் ஒரு மனு கொடுத்தனர். அதில், "எங்கள் பகுதியை சேர்ந்த மக்கள் பயன்படுத்தும் மயானம் மற்றும் ஊருக்கு செல்லும் பாதையில் ஆக்கிரமிப்பு உள்ளது. இந்த ஆக்கிரமிப்பு காரணமாக பல்வேறு இடையூறுகளை சந்தித்து வருகிறோம். எனவே, இந்த பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்" என்று கூறியிருந்தனர்.

மேலும் செய்திகள்