< Back
மாநில செய்திகள்
கோழிப்பண்ணைக்கு மின்சார இணைப்பு வழங்க விவசாயியிடம் ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய ஊழியர் கைது
ஈரோடு
மாநில செய்திகள்

கோழிப்பண்ணைக்கு மின்சார இணைப்பு வழங்க விவசாயியிடம் ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய ஊழியர் கைது

தினத்தந்தி
|
17 Feb 2023 8:20 PM GMT

மின்வாரிய ஊழியர் கைது

கோபி அருகே கோழிப்பண்ணைக்கு மின்சார இணைப்பு வழங்க விவசாயியிடம் ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக மின்வாரிய ஊழியரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

கோழிப்பண்ணை

சத்தியமங்கலம் அருகே உள்ள காளிகுளம் புதுத்தோட்டத்தை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 50). விவசாயி. இவர் தனது கோழிப்பண்ணைக்கு புதிய மின் இணைப்பு பெறுவதற்காக உக்கரம் மின்சார வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்து இருந்தார்.

அந்த அலுவலகத்தில் புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள புங்கம்பள்ளியை சேர்ந்த சுந்தரம் (40) என்பவர் வணிக உதவியாளராக வேலை செய்து வருகிறார்.

கைது

கோழிப்பண்ணைக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும் என்றால் ரூ.3 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என மூர்த்தியிடம் சுந்தரம் கூறியதாக கூறப்படுகிறது.

ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத மூர்த்தி இதுபற்றி ஈரோட்டில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். இதைத்தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுறுத்தலின் பேரில் நேற்று மின்வாரிய அலுவலகத்துக்கு மூா்த்தி சென்றார். அங்கு பணியில் இருந்த சுந்தரத்திடம் லஞ்ச ஒழிப்பு ேபாலீசார் கூறியபடி ரசாயனம் தடவிய ரூ.3 ஆயிரத்தை மூர்த்தி கொடுத்தார். அந்த பணத்தை சுந்தரம் வாங்கி கொண்டார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களமாக சுந்தரத்தை பிடித்து கைது செய்தனர்.

இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

மேலும் செய்திகள்