< Back
மாநில செய்திகள்
தக்காளி செடியை பாதுகாக்க   பந்தல் அமைக்கும் பணியில் விவசாயிகள் மும்முரம்
விருதுநகர்
மாநில செய்திகள்

தக்காளி செடியை பாதுகாக்க பந்தல் அமைக்கும் பணியில் விவசாயிகள் மும்முரம்

தினத்தந்தி
|
7 Nov 2022 12:47 AM IST

மழைக்காலத்தில் தக்காளி செடியை பாதுகாக்க பந்தல் அமைக்கும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தாயில்பட்டி,

மழைக்காலத்தில் தக்காளி செடியை பாதுகாக்க பந்தல் அமைக்கும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தக்காளி சாகுபடி

தாயில்பட்டி, வெம்பக்கோட்டை, சுப்பிரமணியபுரம், சல்வார்பட்டி, செவல்பட்டி, விஜயரங்கபுரம், பூசாரி நாயக்கன்பட்டி, எட்டக்காபட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் தக்காளி அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்ேபாது இந்த பகுதியில் மழை பெய்து வருகிறது.

இ்ந்தநிலையில் தக்காளி செடியை வேர் அழுகல் நோய் தாக்கியுள்ளது. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மழைக்காலத்தில் தக்காளி செடிகளை பாதுகாக்க தாயில்பட்டியில் பந்தல் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

பந்தல் அமைக்கும் பணி

இதுகுறித்து மடத்துப்பட்டி விவசாயி அழகர் ராமானுஜம் கூறியதாவது:-

2 மாதத்தில் விளைச்சல் தரக்கூடிய தக்காளியை விவசாயிகள் அதிக அளவில் சாகுபடி செய்துள்ளனர். போதிய லாபத்தை தரக்கூடிய தக்காளியை தொடர்ந்து நாங்கள் பயிரிட்டு வருகிறோம். ஆனால் மழைக்காலத்தில் தோட்டத்தில் தண்ணீர் தேங்கி தக்காளி செடிகள் அழுகி வீணாகி வருகின்றன. இதனால் நஷ்டம் ஏற்படுகிறது.

இந்த ஆண்டு மழையில் இருந்து தக்காளியை காப்பாற்ற பந்தல் அமைத்து வருகிறோம். இந்த பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகிறோம். அதன் மூலம் செடிகளை கொடியுடன் இணைத்துள்ளதால் செடிகள் மழையினால் வீணாவது தவிர்க்கப்படும். மேலும் தக்காளி உயரமாக வளர்வதுடன் பறிப்பதற்கு எளிதாகவும் இருக்கும், பழங்கள் கூடுதலாக கிடைப்பதால் அதிக வருமானம் கிடைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்