< Back
மாநில செய்திகள்
தேனி
மாநில செய்திகள்
குரங்கம்மை நோய் பரவலை தடுக்க போடி முந்தல் சோதனை சாவடியில் சிறப்பு முகாம்
|30 July 2022 8:31 PM IST
குரங்கம்மை நோய் பரவலை தடுக்க போடி முந்தல் சோதனை சாவடியில் சிறப்பு முகாம் நடந்தது
கேரள மாநிலத்தில் குரங்கம்மை நோய் பரவ தொடங்கி உள்ளது. இதனால் தமிழகத்தில் நோய் பரவாமல் தடுக்க கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தமிழக-கேரள எல்லையில் உள்ள சோதனை சாவடிகளில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுனர்களுக்கு பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி தேனி மாவட்டத்தில் கேரள எல்லையில் உள்ள போடி முந்தல் சோதனை சாவடியில் சிறப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் கேரளாவில் இருந்து பஸ், வாகனங்களில் வருபவர்களுக்கு சுகாதாரத்துறை மூலம் பரிசோதனை செய்யப்படுகிறது.