< Back
மாநில செய்திகள்
தேனி
மாநில செய்திகள்
டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்கபொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வினியோகம்
|7 Oct 2023 12:15 AM IST
கூடலூரில் டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் ்தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தேனி மாட்டம் முழுவதும் டெங்கு தடுப்பு நடவடிக்கையில் சுகாதாரத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கூடலூரில் டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்கும் வகையில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.
காமயகவுண்டன்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருத்துவர் சிராஜூதீன் நிலவேம்பு கசாயம் தயாரித்து பொதுமக்களுக்கு வழங்கினார். அப்போது தங்களது வீடுகளில் உள்ள தேங்காய் செரட்டை, டயர்களில் உள்ளிட்ட பொருட்களில் தண்ணீர் தேங்காமல் வைத்து கொள்ள வேண்டும். காய்ச்சல் அறிகுறி இருந்தால் அருகே உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று கொள்ள வேண்டும் என்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.