< Back
மாநில செய்திகள்
நலிவுற்ற மக்களுக்கான வாழ்வாதாரம் மேம்படஅரசின் திட்டங்களை முனைப்புடன் செயலாற்ற வேண்டும்
விழுப்புரம்
மாநில செய்திகள்

நலிவுற்ற மக்களுக்கான வாழ்வாதாரம் மேம்படஅரசின் திட்டங்களை முனைப்புடன் செயலாற்ற வேண்டும்

தினத்தந்தி
|
30 Jun 2022 6:01 PM GMT

நலிவுற்ற மக்களுக்கான வாழ்வாதாரம் மேம்பட அரசின் திட்டங்களை முனைப்புடன் செயலாற்ற வேண்டும் என்று அரசுத்துறை அலுவலர்களுக்கு துரை.ரவிக்குமார் எம்.பி. வேண்டுகோள் விடுத்தார்.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாலை ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் மாவட்ட வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாவட்ட வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு தலைவர் துரை.ரவிக்குமார் எம்.பி., துணைத்தலைவர் விஷ்ணுபிரசாத் எம்.பி. ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட கலெக்டர் மோகன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, எம்.எல்.ஏ.க்கள் மயிலம் சிவக்குமார், உளுந்தூர்பேட்டை மணிக்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், விழுப்புரம் மாவட்டத்தில் நகர்புறம் மற்றும் ஊரக பகுதிகளில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம், பிரதம மந்திரியின் குடியிருப்பு திட்டம், ஜல்ஜீவன் மிஷன், தூய்மை பாரத இயக்கம், பிரதம மந்திரியின் கிராம சாலைகள் திட்டம், நாடாளுமன்ற உள்ளூர் தொகுதி மேம்பாட்டு திட்டம், மாதிரி கிராம திட்டம், பிரதம மந்திரியின் முன்னோடி கிராம வளர்ச்சி திட்டம், பிரதான் மந்திரி குடியிருப்பு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்தும், மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்தும்எம்.பி.க்கள் துரை.ரவிக்குமார், விஷ்ணுபிரசாத் ஆகியோர் ஆய்வு செய்ததுடன் ஒவ்வொரு திட்டமும் குறிப்பிட்ட காலத்திற்குள் மக்களை சென்றடையும் வகையில் செயலாற்றிட வேண்டும் என்று அறிவுறுத்தினர்.

திட்டமிட்டு செயல்பட வேண்டும்

அதனை தொடர்ந்து துரை.ரவிக்குமார் எம்.பி. பேசுகையில், அரசு திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அரசுத்துறை அலுவலர்களுக்கு பெரும் பங்கு உண்டு. அதை உரிய காலத்தில் சேர்த்திட அலுவலர்கள் திட்டமிட்டு செயல்பட வேண்டும். குறிப்பாக நலிவுற்ற மக்களுக்கான வாழ்வாதாரம் மேம்பட அரசின் திட்டங்களை முனைப்புடன் செயலாற்ற வேண்டும். வீட்டுவசதி வாரியத்துறை மற்றும் குடிசை மாற்று வாரியத்துறையின் மூலம் மத்திய அரசு திட்டமான வீடு வழங்கும் திட்டத்தில் தகுதியுள்ள பயனாளிகள் அனைவருக்கும் வீடு வழங்க வேண்டும் என்றார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயச்சந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சங்கர், மகளிர் திட்ட இயக்குனர் காஞ்சனா, விழுப்புரம் நகரமன்ற தலைவர் தமிழ்ச்செல்வி, மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் ஷீலாதேவி சேரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்