ஈரோடு
புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற மாணவிகள் விண்ணப்பிக்கலாம்; கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தகவல்
|புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார்.
புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார்.
புதுமைப்பெண் திட்டம்
இதுகுறித்து ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:-
அரசு பள்ளிக்கூடங்களில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படித்து, உயர்கல்வி மற்றும் தொழில்நுட்ப கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1,000 உதவி தொகை வழங்கிட தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், "புதுமைப் பெண்" எனும் திட்டத்தை அறிவித்தார்.
கடந்த மாதம் 5-ந்தேதி தொடங்கப்பட்ட இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 1 லட்சத்து 13 ஆயிரம் மாணவிகள் உதவித்தொகை பெற்று பயனடைந்து உள்ளனர்.
தற்போது, முதலாம் ஆண்டு படிக்கும் மாணவிகள் உதவித்தொகை பெற்றிட https://www.pudhumaipenn.tn.gov.inஎன்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். தாங்கள் படிக்கும் கல்வி நிறுவனங்கள் மூலமாக மட்டுமே மாணவிகள் விண்ணப்பிக்க வேண்டும்.
சிறப்பு முகாம்
நவம்பர் மாதம் 1-ந்தேதி முதல் 11-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதில் விண்ணப்பிக்கும் மாணவிகளுக்கான தகுதி மற்றும் வயது வரம்பு குறித்து அந்தந்த கல்வி நிறுவனங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.
மேலும், விண்ணப்பிப்பதில் ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின், சமூக நல இயக்குனரக அலுவலகத்தை திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 10 முதல் மாலை 5 மணி வரை 91500 56810, 91500 56801, 91500 56805, 91500 56809 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். மேலும், mraheas@gmail.com எனும் மின்னஞ்சல் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் அவர் தெரிவித்து உள்ளார்.