< Back
மாநில செய்திகள்
மாணவர்களின் சாதி உணர்வை அகற்ற  நீதிபதி குழுவின் பரிந்துரையை நிறைவேற்ற வேண்டும் - வைகோ கோரிக்கை
மாநில செய்திகள்

மாணவர்களின் சாதி உணர்வை அகற்ற நீதிபதி குழுவின் பரிந்துரையை நிறைவேற்ற வேண்டும் - வைகோ கோரிக்கை

தினத்தந்தி
|
25 Jun 2024 1:19 PM IST

தமிழகத்தை சமத்துவ பூமியாக மாற்றி அமைத்திட தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என வைகோ தெரிவித்துள்ளார்.

சென்னை,

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

மாணவர்களிடம் சாதிய உணர்வுகளை அகற்றி சமத்துவமும், தோழமையும் கொண்டு அவர்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் காண வேண்டும் என்ற நோக்கத்தோடு தமிழ்நாடு அரசு ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி கே.சந்துரு தலைமையில் ஒரு குழுவினை நியமித்தது.பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக இயக்கங்கள், பொதுநல அமைப்புக்கள் ஆகியவைகளிடம் இது தொடர்பான கருத்துக்களை பெற்றும், பிரச்சனைக்குரிய பகுதிகளுக்கு நேரடியாக சென்று கள ஆய்வு செய்தும் இந்தக்குழு பரிந்துரைகளை தயாரித்து அதனை முறைப்படி மு.க.ஸ்டாலினிடம் வழங்கி உள்ளது. இந்தக் குழுவின் பரிந்துரைகளை வரவேற்று, அவைகளை செயல்படுத்தி தமிழகத்தை சமத்துவ பூமியாக மாற்றி அமைத்திட தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்