< Back
மாநில செய்திகள்
திருவாரூர்
மாநில செய்திகள்
தார்ச்சாலை வேண்டும்
|3 Jun 2022 9:01 PM IST
தார்ச்சாலை வேண்டும்
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே 54 நெம்மேலி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் இருந்து காசாங்குளம் இணைப்பு சாலை செம்மண் சாலையாகவே உள்ளது. இணைப்பு பாலம் கட்டி 2 வருடங்கள் ஆகிறது. ஆனால் இதுவரை தார்ச்சாலை போடவில்லை. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். மழை பெய்தால் மழை தண்ணீர் தேங்கி சேறு நிறைந்து காணப்படுகிறது. இதனால் மாணவ-மாணவிகள் மற்றும் முதியவர்கள் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் புதிய தார்ச்சாலை அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், 54 நெம்மேலி.