< Back
மாநில செய்திகள்
தொழில் வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும்
விழுப்புரம்
மாநில செய்திகள்

தொழில் வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும்

தினத்தந்தி
|
8 Sept 2022 11:51 PM IST

தொழில் வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்று சி.ஐ.டி.யு. மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

விழுப்புரம்,

விழுப்புரத்தில் சி.ஐ.டி.யு. அமைப்பின் 10-வது மாவட்ட மாநாடு நடைபெற்றது. மாநாட்டிற்கு மாவட்ட தலைவர் முத்துக்குமரன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் புருஷோத்தமன், செங்கொடியை ஏற்றி வைத்தார். துணைச்செயலாளர் மலர்விழி அனைவரையும் வரவேற்றார். மாவட்ட துணைச்செயலாளர் அருள்ஜோதி, அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். மாநில செயலாளர் ஜெயபால், மாநாட்டை தொடங்கி வைத்து தொடக்க உரையாற்றினார். வேலை அறிக்கையை மாவட்ட செயலாளர் மூர்த்தி முன்வைத்து பேசினார். மாவட்ட பொருளாளர் பாலகிருஷ்ணன் வரவு- செலவு கணக்கை சமர்பித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் முருகன், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி ஆகியோர், மாநாட்டை வாழ்த்தி பேசினர். மாநில செயலாளர் கருப்பையன் கலந்துகொண்டு நிறைவுரை ஆற்றினார். இதில் நிர்வாகிகள் குமார், அம்பிகாபதி, சகாதேவன், ரகோத்தமன், சேகர், அருள் ஆகியோர் கலந்துகொண்டனர். தொடர்ந்து, புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அதன்படி மாவட்ட தலைவராக முத்துக்குமரன், மாவட்ட செயலாளராக மூர்த்தி, பொருளாளராக பாலகிருஷ்ணன் உள்பட 6 மாவட்ட துணைத்தலைவர்கள், 6 மாவட்ட துணைச்செயலாளர்கள், 21 மாவட்டக்குழு உறுப்பினர்கள் என 36 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

இம்மாநாட்டில், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தி குறைக்க வேண்டும், மாவட்டத்தில் தொழில் வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும், மத்திய அரசு கொண்டு வந்துள்ள மின்சார திருத்த மசோதாவை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் மாவட்ட துணைச்செயலாளர் கணபதி நன்றி கூறினார்.



மேலும் செய்திகள்