கன்னியாகுமரி
மார்த்தாண்டம் அருகே நிதி நிறுவன பெண் ஊழியரிடம்11 பவுன் தங்கசங்கிலி பறிப்பு
|குழித்துறை: மார்த்தாண்டம் அருகே நிதி நிறுவன பெண் ஊழியரிடம் 11 பவுன் தங்கசங்கிலியை பறித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.
குழித்துறை:
மார்த்தாண்டம் அருகே நிதி நிறுவன பெண் ஊழியரிடம் 11 பவுன் தங்கசங்கிலியை பறித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.
11 பவுன் சங்கிலி பறிப்பு
குழித்துறை பாளையங்கெட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ். இவருடைய மனைவி அனிதா (வயது 38). இவர் தேங்காப்பட்டணத்தில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். அனிதா தினமும் வீட்டிலிருந்து ஸ்கூட்டரில் வேலைக்கு சென்று வந்தார்.
அதே போல் நேற்று முன் தினம் காலையில் வீட்டிலிருந்து ஸ்கூட்டரில் அனிதா புறப்பட்டு மார்த்தாண்டம் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த 2 மர்ம ஆசாமிகள் திடீரென்று அனிதாவின் கழுத்தில் கிடந்த 11 பவுன் தங்க சங்கிலியை பறித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த அனிதா தனது ஸ்கூட்டரை நிறுத்தி விட்டு, 'திருடன், திருடன்' என்று அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர்.
அதற்குள் சங்கிலியை பறித்த 2 பேரும் தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் சென்று விட்டனர்.
போலீஸ் தேடுகிறது
இந்த சம்பவம் குறித்து அனிதா மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து சம்பவம் நடந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, மர்ம ஆசாமிகள் 2 பேரையும் தேடி வருகிறார்கள்.