< Back
மாநில செய்திகள்
தென் மாவட்டங்களுக்கு செல்லும் அரசு பஸ்கள் அனைத்தும் இனி கிளாம்பாக்கத்தில் இருந்தே புறப்படும்கோப்புபடம்
மாநில செய்திகள்

தென் மாவட்டங்களுக்கு செல்லும் அரசு பஸ்கள் அனைத்தும் இனி கிளாம்பாக்கத்தில் இருந்தே புறப்படும்

தினத்தந்தி
|
29 Jan 2024 8:54 AM IST

தென் மாவட்டங்களுக்கு செல்லும் டிஎன்எஸ்டிசி பேருந்துகள் நாளை முதல் கோயம்பேட்டில் இருந்து இயக்கப்படாது என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை,

அமைச்சர் சிவசங்கர் வெளியிட்ட தகவலின் படி,

தென் மாவட்டங்களுக்கு செல்லும் டிஎன்எஸ்டிசி பேருந்துகளும் நாளை முதல் கிளாம்பாக்கத்தில் இருந்துதான் இயக்கப்படும்.

சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து 710 டிஎன்எஸ்டிசி பேருந்துகள் செல்லும்.மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து 160 டிஎன்எஸ்டிசி பேருந்துகள் இயக்கப்படும். ஏற்கனவே விரைவுப்பேருந்துகள், ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படுகின்றன.

செங்கல்பட்டு, திண்டிவனம் வழியாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து புறப்படும். தென் மாவட்டங்களுக்கு செல்லும் 20% பேருந்துகள் மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.

ஈசிஆர், பூந்தமல்லி வழியாக செல்லும் டிஎன்எஸ்டிசி பேருந்துகள் வழக்கம்போல் கோயம்பேட்டில் இருந்து இயக்கப்படும். விழுப்புரம் கோட்டத்தில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் தாம்பரம் வரை இயக்கப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்இடிசி ஆம்னி பேருந்துகள் ஏற்கனவே கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும் நிலையில் டிஎன்எஸ்டிசி-ம் சேர்க்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்