< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
டி.என்.பி.எஸ்.சி போட்டித் தேர்வுகளுக்கான ஆண்டு அட்டவணை வெளியிடும் தேதி அறிவிப்பு
|25 Nov 2023 3:08 PM IST
15 ஆயிரம் பணியிடங்களுக்கான அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி வெளியிடும் எனக் கூறப்படுகிறது.
சென்னை,
தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வு ஆணையம் எனப்படும் டி.என்.பி.எஸ்.சி நிரப்பி வருகிறது. குரூப் 1, குரூப் 2, 2ஏ, குரூப் 4 என பல்வேறு நிலைகளில் உள்ள பணியிடங்கள் அவ்வப்போது அறிவிப்பு வெளியிடப்பட்டு நிரப்பப்படுகின்றன.
இதற்கான ஆண்டு தேர்வு கால அட்டவணையை டி.என்.பி.எஸ்.சி ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், அடுத்த ஆண்டுக்கான டி.என்.பி.எஸ்.சி தேர்வு அட்டவணை வரும் டிசம்பர் 15 ஆம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 15 ஆயிரம் பணியிடங்களுக்கான அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி வெளியிடும் எனக் கூறப்படுகிறது. 30 வகையான போட்டித்தேர்வுகள் குறித்த அறிவிப்பு வெளியாகிறது.