< Back
மாநில செய்திகள்
டி.என்.பி.எஸ்.சி. குருப்-4 தேர்விற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரம்
கரூர்
மாநில செய்திகள்

டி.என்.பி.எஸ்.சி. குருப்-4 தேர்விற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

தினத்தந்தி
|
22 July 2022 6:38 PM GMT

குளித்தலை வட்டாரத்தில் நாளை நடைபெறும் டி.என்.பி.எஸ்.சி. குருப்-4 தேர்விற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

குரூப்-4 தேர்வு

தமிழ்நாடு தேர்வாணையம் மூலம் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. குளித்தலை வட்டார பகுதியில் உள்ள குளித்தலை, அய்யர்மலை, தோகைமலை, இடையப்பட்டி, ஆர்.டி. மலை, ஆலத்தூர், நெய்தலூர்காலனி உள்ளிட்ட பகுதியில் உள்ள அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள், அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் என மொத்தம் 19 இடங்களில் உள்ள தேர்வு மையங்களில் குரூப்-4 தேர்வு நாளை நடைபெற உள்ளது.

இதையொட்டி இந்த தேர்வு மையங்களில் தேர்வு எழுத உள்ளவர்களுக்கான வினாத்தாள் மற்றும் விடைத்தாள்கள் கரூர் மாவட்ட கருவூலத்திலிருந்து குளித்தலைக்கு போலீஸ் பாதுகாப்புடன் வேனில் நேற்று கொண்டு வரப்பட்டது.

பாதுகாப்பு

இந்த வினாத்தாள் மட்டும் விடைத்தாள்கள் குளித்தலை வட்டாட்சியர் சிவக்குமார் மற்றும் மண்டல துணை வட்டாட்சியர் வைரப்பெருமாள் முன்னிலையில் குளித்தலை கருவூல அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டது. இதனைதொடர்ந்து நாளை ஞாயிற்றுக்கிழமை தேர்வு நடைபெற உள்ள 19 மையங்களுக்கும் இந்த வினாத்தாள் மற்றும் விடைத்தாள்கள் கொண்டு செல்லப்பட உள்ளன.

மேலும் செய்திகள்