< Back
மாநில செய்திகள்
திருச்செந்தூர் சிவந்தி அகாடமியில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 பயிற்சி வகுப்பு தொடக்க விழா
தூத்துக்குடி
மாநில செய்திகள்

திருச்செந்தூர் சிவந்தி அகாடமியில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 பயிற்சி வகுப்பு தொடக்க விழா

தினத்தந்தி
|
4 Jun 2022 5:39 PM GMT

திருச்செந்தூர் சிவந்தி அகாடமியில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 பயிற்சி வகுப்பு தொடக்க விழா நடந்தது.

திருச்செந்தூர்:

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்தும் குரூப்-4 மற்றும் வி.ஏ.ஓ. தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள், திருச்செந்தூர் சிவந்தி அகாடமியில் நேற்று தொடங்கியது. தொடர்ந்து வருகிற 28-ந்தேதி வரையிலும் 25 நாட்கள் பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது.

தொடக்க விழாவில் சிவந்தி அகாடமி ஒருங்கிணைப்பாளர் முத்தையா ராஜ் வரவேற்று பேசினார். ஆதித்தனார் கல்வி நிறுவன செயலாளர் நாராயண ராஜன் வாழ்த்தி பேசினார். பயிற்சி வகுப்புகளின் இயக்குனர் ரமேஷ் ராமலிங்கம் பயிற்சி முறைகள் குறித்து விளக்கி கூறினார்.

திருச்செந்தூர் உதவி கலெக்டர் புகாரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார். அவர் பேசுகையில், ''அரசு போட்டித்தேர்வுக்கு பயிற்சி பெறும் மாணவ-மாணவிகள் சீரிய முறையில் பயின்று, உறுதியான லட்சியத்துடன் செயல்பட்டால் சிறப்பான வெற்றி பெறலாம். இங்கு பயின்ற பலரும் தேர்வுகளில் வென்று உயர் பதவிகளில் இருப்பதை அறிந்து பெரிதும் மகிழ்கிறேன்'' என்றார். டாக்டர் பென்னட் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்