< Back
மாநில செய்திகள்
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 மாதிரி தேர்வு
திருநெல்வேலி
மாநில செய்திகள்

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 மாதிரி தேர்வு

தினத்தந்தி
|
14 July 2022 2:24 AM IST

நெல்லையில் வருகிற 17-ந்ேததி டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 மாதிரி தேர்வு நடைபெற உள்ளது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் குரூப்-4 தேர்வு வருகிற 24-ந்தேதி நடக்க உள்ளது. இந்த தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வு நெல்லை மாவட்ட மைய நூலகம் மற்றும் நெல்லை சிவராஜவேல் ஐ.ஏ.எஸ். பயிற்சி நிறுவனம் சார்பில் வருகிற 17-ந் தேதி பாளையங்கோட்டை தூய யோவான் கல்லூரியில் நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வு காலை 9 மணிக்கு தொடங்கி மதியம் 12 மணி வரை நடக்க உள்ளது. தேர்வு முடிந்த பின்னர் வழிகாட்டுதல், ஊக்கவுரை வழங்கப்பட உள்ளது. தேர்வில் வெற்றி பெறும் முதல் 8 பேருக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளன. இந்த மாதிரி தேர்வு எழுத விரும்புபவர்கள் 9626252500, 9626253300 என்ற எண்களில் தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம். இந்த தகவல் நெல்லை மாவட்ட மைய நூலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்