< Back
மாநில செய்திகள்
டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 மாதிரி தேர்வுகள்
ராணிப்பேட்டை
மாநில செய்திகள்

டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 மாதிரி தேர்வுகள்

தினத்தந்தி
|
6 July 2022 11:57 PM IST

ராணிப்பேட்டையில் டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 மாதிரி தேர்வுகள் 4 நாட்கள் நடக்கிறது.

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் தொகுதி 4 -க்கான போட்டி தேர்வு வருகிற 24-ந் தேதி நடைபெறுகிறது. இதற்கான மாதிரி தேர்வுகள் ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் வருகிற 9 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

இந்த மாதிரி தேர்வு எழுதுவதற்கு விருப்பமுள்ள போட்டி தேர்வர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் நேரிலோ அல்லது 04172-291400 என்ற தொலைபேசி மூலமாகவோ, ranipetjobfair@gmail.com என்ற‌ மின்னஞ்சல் மூலமாகவோ தொடர்பு கொண்டு தங்கள் வருகையை உறுதி செய்து கொள்ளலாம்.

மேலும் ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தொகுதி 4 போட்டி தேர்வுக்கு பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. குறிப்பிட்ட கால இடைவெளியில் மாதிரி தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகிறது. கட்டணமில்லா பயிற்சி வகுப்பில் பங்கேற்க விரும்பும் தேர்வர்கள் போட்டி தேர்விற்கு விண்ணப்பித்த விண்ணப்ப படிவ நகல், புகைப்படம் மற்றும் ஆதார் அட்டை நகல் ஆகியவற்றுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வந்து விண்ணப்பித்து பயன் பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
மேலும் செய்திகள்