< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 முதல் நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு
|28 April 2023 8:39 PM IST
தமிழகத்தில் நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 முதல் நிலை தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
சென்னை,
தமிழகத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெறுவதாக இருந்த டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 முதல் நிலை தேர்வு சில காரணங்களுக்காக தள்ளிவைக்கப்பட்டு நவம்பர் மாதம் நடைபெற்றது. இந்த தேர்வை எழுத 3 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்திருந்த நிலையில் 1,90,957 பேர் இத்தேர்வை எழுதினர்.
இந்த நிலையில் துணை கலெக்டர், துணை போலீஸ் சுப்பிரண்டுகள் உள்ளிட்ட 92 பணியிடங்களுக்காக நடத்தப்பட்ட குரூப் 1 முதல் நிலை தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. இதில் தேர்ச்சி பெற்றவர்கள் 2-ம் கட்டமாக நடைபெறும் முதன்மை தேர்வுக்கு தயாராகலாம் என்பது குறிப்பிடத்தக்கது.