டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 நேர்முகத் தேர்வு முடிவுகள் வெளியீடு
|குரூப்-1 நேர்முகத் தேர்வு முடிவுகள் டி.என்.பி.எஸ்.சி. அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் வெளியிப்பட்டுள்ளது.
சென்னை,
துணை கலெக்டர், துணை போலீஸ் சூப்பிரண்டு, வணிக வரித்துறை உதவி ஆணையர், கூட்டுறவு துறை துணை பதிவாளர் உள்ளிட்ட குரூப்-1 பதவிகளில் 66 காலி பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வு கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 3-ந்தேதி நடந்தது.
இந்த தேர்வை 1 லட்சத்து 31 ஆயிரத்து 701 பேர் எழுதினார்கள். இதற்கான தேர்வு முடிவு கடந்த டிசம்பர் மாதம் வெளியிடப்பட்டு, முதன்மை தேர்வுக்கு தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலும் வெளியிடப்பட்டது. அதன்படி, முதன்மை தேர்வுக்கு 3 ஆயிரத்து 800 பேர் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். அவர்களுக்கான முதன்மை தேர்வு மார்ச் மாதம் 4, 5, 6-ந் தேதிகளில் நடந்தது.
இந்த முதன்மை தேர்வுக்கான முடிவுகளை கடந்த மாதம் 29-ம் தேதி தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. இதில் 137 பேர் நேர்முகத் தேர்வுக்கு தகுதி பெற்றனர். அதன்படி இவர்களுக்கு நேர்முகத் தேர்வு முடிந்த நிலையில் இன்று முடிவுகள் வெளியாகியுள்ளது. இந்த தேர்வு முடிவுகள் டி.என்.பி.எஸ்.சி. அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் வெளியிப்பட்டுள்ளது.