மதுரை
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வு: மதுரையில் 65 தேர்வு மையங்களில் 20,259 பேர் எழுதினர்
|டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வு: மதுரையில் 65 தேர்வு மையங்களில் 20,259 பேர் எழுதினர்
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் குரூப்-1 தேர்வுகள் நேற்று நடந்தன. இந்த தேர்வுக்காக மதுரை மாவட்டத்தில் 65 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. மதுரை அரசினர் மீனாட்சி பெண்கள் கல்லூரி, மதுரை காமராஜர் பல்கலைக்கழக கல்லூரி, லேடிடோக் கல்லூரி, திருமலை நாயக்கர் கல்லூரி, புதூர் அல்அமீன் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட இடங்களில் தேர்வு நடந்தது. இதில், 20,259 பேர் தேர்வு எழுதினர். தேர்வு மையங்களில் ஆய்வு செய்ய உதவியாளர் அந்தஸ்தில் உள்ள 65 பேரும், மொபைல் ஆய்வாளர் பணியில் துணைத்தாசில்தார் அந்தஸ்தில் உள்ள 18 பேரும், பறக்கும்படை படையில் துணை ஆட்சியர் அந்தஸ்தில் 5 பேரும், வீடியோ பதிவு செய்ய 66 பேரும் நியமிக்கப்பட்டு இருந்தனர். முன்னதாக, மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் ஒரு சில தேர்வு மையங்களுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினார். அப்போது, தேர்வர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், தேர்வுக்கூட ஏற்பாடுகள் ஆகியன குறித்து ஆய்வு செய்தார்.