< Back
மாநில செய்திகள்
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு

கோப்புப்படம் 

மாநில செய்திகள்

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு

தினத்தந்தி
|
28 March 2024 11:22 AM IST

இன்று முதல் அடுத்த மாதம் 27-ம் தேதி வரை ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

டி.என்.பி.எஸ்.சி. சார்பில் அரசின் பல்வேறு காலி இடங்களை நிரப்ப போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. தேவைக்கு ஏற்ப குரூப் 1, 2, 3, 4 என பல்வேறு வகையான தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

இதில் துணை ஆட்சியர், காவல்துறை உதவி கண்காணிப்பாளர், உதவி ஆணையர், ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் முதலிய பணிகள் குரூப்-1 தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது.

இந்த நிலையில், நடப்பாண்டுக்கான டி.என்.பி.எஸ்.சி குரூப்.1 தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 90 பணியிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்படும் இந்த தேர்வுக்கு இன்று முதல் அடுத்த மாதம் 27-ம் தேதி வரை ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். முதல் நிலைத்தேர்வு வருகிற ஜூலை 13ம் தேதி நடைபெறும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்