< Back
மாநில செய்திகள்
குரூப்-4 தேர்வுக்கான பணியிடங்களை அதிகரிப்பது தொடர்பாக எழுந்த கோரிக்கைகளுக்கு டிஎன்பிஎஸ்சி விளக்கம்

கோப்புப்படம் 

மாநில செய்திகள்

குரூப்-4 தேர்வுக்கான பணியிடங்களை அதிகரிப்பது தொடர்பாக எழுந்த கோரிக்கைகளுக்கு டிஎன்பிஎஸ்சி விளக்கம்

தினத்தந்தி
|
13 Oct 2024 12:08 PM IST

இந்த ஆண்டு நடைபெற்ற குரூப்-4 தேர்வின் மூலம் 8,932 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.

சென்னை,

குரூப்-4 தேர்வுக்கான பணியிடங்களை அதிகரிப்பது தொடர்பாக எழுந்த கோரிக்கைகளுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

2022-ல் நடைபெற்ற குரூப்-4 தேர்வின் மூலம் 2020-21, 2021-22, 2022- 23 ஆகிய மூன்று நிதி ஆண்டுகளுக்கான 10,139 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டன. அதாவது சராசரியாக, ஒரு நிதியாண்டிற்கு 3,380 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டன.

2024-ல் நடைபெற்ற குரூப்-4 தேர்வின் மூலம் 2023-24, 2024-25 ஆகிய இரண்டு நிதி ஆண்டுகளுக்கான 8,932 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதாவது ஒரு நிதியாண்டிற்கு 4,466 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.

எனவே 2024-ம் ஆண்டு குரூப்-4 தேர்வின் மூலம் சராசரியாக ஒரு நிதியாண்டிற்கு கூடுதலாக 1,086 (4466-3380) காலிப்பணியிடங்கள், ஆக மொத்தம் 2,172 (1086×2) காலிப்பணியிடங்கள் கூடுதலாக நிரப்பப்படவுள்ளன. எனவே சமூக வலைதளங்களில் காலிப்பணியிடங்கள் தொடர்பாக பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்