< Back
மாநில செய்திகள்
தேனி
மாநில செய்திகள்
டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு விழிப்புணர்வு
|23 July 2023 2:30 AM IST
தேனியில் டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில், டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வில் தேர்ச்சிபெற்று சான்றிதழ் சரிபார்ப்புக்காக செல்லும் நபர்களுக்கு அரசுத்துறைகளை தேர்வு செய்வது குறித்த சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதற்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் நாராயணமூர்த்தி தலைமை தாங்கினார்.
இதில் வருவாய்த்துறை, வேளாண்மை துறை, ஊரக வளர்ச்சித்துறை, சமூக நலத்துறை, வனத்துறை, கருவூலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்துகொண்டு, எந்தெந்த துறைகளை தேர்வுசெய்வது குறித்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அறிவுரைகள் வழங்கினர்.