< Back
மாநில செய்திகள்
குரூப் - 5 ஏ தேர்வு: அறிவிப்பாணை வெளியிட்டது டி.என்.பி.எஸ்.சி
மாநில செய்திகள்

குரூப் - 5 ஏ தேர்வு: அறிவிப்பாணை வெளியிட்டது டி.என்.பி.எஸ்.சி

தினத்தந்தி
|
23 Aug 2022 2:32 PM IST

குரூப் 5 ஏ தேர்வுக்கு இன்று முதல் வரும் செப்டம்பர் 21 ஆம் தேதி வரை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

சென்னை,

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் நிரப்பி வருகிறது. அந்த வகையில் குரூப் -5 ஏ தேர்வுக்கான அறிவிப்பாணையை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் வெளியிட்டுள்ளது. தலைமைச்செயலகத்தில் பிரிவு அலுவலர், உதவியாளர், உள்ளிட்ட பதவிகளில் காலியாக உள்ள 161 இடங்களை நிரப்ப குரூப் -5 ஏ தேர்வு நடைபெற உள்ளது.

குரூப் 5 ஏ தேர்வுக்கு இன்று முதல் வரும் செப்டம்பர் 21 ஆம் தேதி வரை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். செப்டம்பர் 26 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. டிசம்பர் 18 ஆம் தேதி எழுத்துத்தேர்வு நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்ட்டுள்ளது.

மேலும் செய்திகள்