< Back
மாநில செய்திகள்
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-3 தேர்வை 1,164 பேர் எழுதினர்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-3 தேர்வை 1,164 பேர் எழுதினர்

தினத்தந்தி
|
28 Jan 2023 6:44 PM GMT

புதுக்கோட்டையில் நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி. குரூப்-3 தேர்வை 1,164 பேர் எழுதினர். 907 பேர் தேர்வு எழுதவரவில்லை.

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-3 தேர்வு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில், தமிழக அரசின் பல்வேறு பணிகளுக்கு தகுதி உள்ள நபர்களை தேர்ந்தெடுக்கும் வகையில் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி தமிழகம் முழுவதும் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-3 பதவிக்கான தேர்வு நேற்று நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் மன்னர் கல்லூரி மற்றும் புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகிய இடங்களில் மொத்தம் 7 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன.

1,164 பேர் எழுதினர்

தேர்வு எழுத விண்ணப்பித்த தேர்வர்கள் நேற்று காலை தேர்வு மையங்களுக்கு வந்தனர். இத்தேர்வை எழுத விண்ணப்பித்த 2,071 பேரில் 1,164 பேர் தேர்வு எழுதினர். 907 பேர் தேர்வு எழுதவரவில்லை. இது 44 சதவீதம் ஆகும். தேர்வு மையத்திற்குள் செல்போன், கால்குலேட்டர் உள்ளிட்ட பல்வேறு மின்னணு சாதனங்கள் தடைசெய்யப்பட்டிருந்தன. தேர்வர்கள் பலத்த சோதனைக்கு பின் அனுமதிக்கப்பட்டனர். இத்தேர்வினை 7 முதன்மை கண்காணிப்பு அலுவலர்களும், 7 ஆய்வு அலுவலர்களும் கண்காணித்தனர். தேர்வு நடைமுறைகள் அனைத்தும் வீடியோ பதிவு செய்யப்பட்டது.

தேர்வுகள் நடைபெற்று வரும் அனைத்து மையங்களிலும் தேர்வுகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன. மன்னர் கல்லூரியில் நடைபெற்ற தேர்வினை கலெக்டர் கவிதாராமு பார்வையிட்டார். முன்னதாக, தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய உறுப்பினர் ஆரோக்கிய ராஜ், மன்னர் கல்லூரி மற்றும் கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தேர்வு நடைபெற்றதை ஆய்வு செய்தார்.

மேலும் செய்திகள்