< Back
மாநில செய்திகள்
டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர்; தமிழக வீரர்கள் நாளை முதல் பெயரை பதிவு செய்யலாம் என அறிவிப்பு
மாநில செய்திகள்

டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர்; தமிழக வீரர்கள் நாளை முதல் பெயரை பதிவு செய்யலாம் என அறிவிப்பு

தினத்தந்தி
|
27 Dec 2022 8:46 PM IST

தமிழக வீரர்கள் நாளை முதல் ஜனவரி 20-ந்தேதி வரை தங்கள் பெயரை பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

7-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு ஜூன், ஜூலை மாதங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தொடரில் டி.என்.பி.எல். நிர்வாகம் பல்வேறு மாற்றங்களை மேற்கொள்ள இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி தொடரில் பங்கேற்கும் வீரர்கள் ஐ.பி.எல். போன்று ஏல முறைப்படி தேர்வு செய்யப்படுவார்கள் எனவும், இதற்காக ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக 70 லட்சம் ரூபாய் வரை செலவு செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வீரர்கள் விடுவிப்பு, தங்கவைப்பு உள்ளிட்டவை குறித்து அணி நிர்வாகத்தினருடன் அணி நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. போட்டியில் பங்கேற்க விரும்பும் தமிழக வீரர்கள் நாளை முதல் ஜனவரி 20-ந்தேதி வரை தங்கள் பெயரை பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான விண்ணப்பத்தை சென்னை சேப்பாக்கத்தில் உள்ள தமிழக கிரிக்கெட் சங்க அலுவலகத்திலோ அல்லது டி.என்.சி.ஏ. - டி.என்.பி.எல். இணையதளத்திலோ பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நடுவர்களின் தீர்ப்பை அப்பீல் செய்யும் டி.ஆர்.எஸ். தொழில்நுட்பமும் டி.என்.பி.எல். தொடரில் முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



மேலும் செய்திகள்