< Back
மாநில செய்திகள்
அனைத்து துறை அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் அனுப்பிய கடிதம் - ஐகோர்ட்டில் தாக்கல் செய்தது தமிழக அரசு
மாநில செய்திகள்

அனைத்து துறை அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் அனுப்பிய கடிதம் - ஐகோர்ட்டில் தாக்கல் செய்தது தமிழக அரசு

தினத்தந்தி
|
7 July 2022 11:35 AM IST

அனைத்து துறை அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் அனுப்பிய கடிதத்தின் நகலை தமிழக அரசு ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ளது.

சென்னை,

சென்னை மடிப்பாக்கத்தில் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான வழக்கில், அண்மையில் ஐகோர்ட் நீதிபதிகள் சில கருத்துக்களை தெரிவித்திருந்தனர். அதில் கோர்ட் பிறப்பிக்கும் உத்தரவை அதிகாரிகள் உடனடியாக அமல்படுத்துவது இல்லை என்றும், இதன் காரணமாக மனுதாரர்கள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள் என்று நீதிபதிகள் கூறியிருந்தனர்.

எனவே நீதிபதிகளின் உத்தரவுகளை உடனடியாக செயல்படுத்துவதன் மூலம் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை தவிர்க்கலாம் என்றும், ஒருவேளை அந்த உத்தரவுகளை செயல்படுத்த முடியாவிட்டால் அது குறித்து மேல்முறையீடு செய்யலாம். ஆனால் அதையும் அதிகாரிகள் செய்வதில்லை என நீதிபதிகள் வேதனை தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை தவிர்ப்பதற்காக நீதிமன்ற உத்தரவுகளை குறித்த காலத்தில் அமல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு, அனைத்து துறை அதிகாரிகளுக்கும் அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இன்று நீதிபதிகளிடம் தெரிவித்தார். மேலும் தலைமைச் செயலாளர் அனுப்பிய கடிதத்தையும் கோர்ட்டில் அவர் சமர்ப்பித்துள்ளார்.

மேலும் செய்திகள்